இலங்கையில் பிரதானமான பொது சந்தை பெட்டா!

இலங்கையின் தலைநகரமான கொழும்பில் உள்ள பிரபல்யமான சந்தை பெட்டா சந்தை ஆகும். உள்நாட்டு வாடிக்கையாளர்களை மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஈர்த்த பெட்டா சந்தையானது ஒரு புரியாத புதிராகவே காட்சியளிக்குறது. பரபரப்பான வணிக பகுதியான பெட்டா  சந்தை ஓர் திறந்தவெளி சந்தை தொடராகும். இங்கு ஏராளமான மொத்த மற்றும் சில்லறை கடைகள், கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் உள்ளன.

மலிபன் தெரு

இந்த பகுதியில் எழுது கருவிகள் , பாடசாலை உபகரணங்கள் மற்றும் திருமண அழைப்பிதழ்கள் பிரபல்யமானதாகும் .

 

கபோஸ் லைன்  வெல்ஸ் தெரு 

இங்கே நீங்கள் பேக்கிங் பொருட்கள் மற்றும் கேக் பான்கள் செய்ய தேவைப்படும் அச்சுகள்  போன்ற உபகரணங்களையும்  விற்பனைக்கு உண்டு .

பிரின்ஸ்  தெரு

கண்ணாடியிலிருந்து தயாரிக்கப்பட்ட  கைவண்ண பொருட்களையும் , இலத்திரனியல் உபகரணங்கள்  மற்றும் விளையாட்டு பொருட்களையும் இங்கே காணலாம்.

பங்க்ஷன்ல் தெரு 

இந்த தெரு வழக்கமான பாவனைக்கான பலவிதமான பொருட்களைக் கொண்டிருப்பதால் மிகவும் பிஸியாக இருக்கும். இங்கு  கைவினைப் பொருட்களை விற்கும் கடைகள் மற்றும்  வீட்டு அலங்கார பொருட்கள்  மற்றும் ரசாயன பொருட்களையும் காணலாம்.

 

மெயின் வீதி ஒழ்க்கோட் தெரு இரண்டாம் குறுக்கு சந்தி கயஸிர் தெரு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோரை பிரதான வீதியில் காணலாம். தயார் செய்யப்பட்ட ஆடைகள் , அணிகலன்கள் மற்றும்   ஜவுளி சம்பந்தப்பட்ட அனைத்தும் பொருட்களும்  பிரதான வீதியில் உள்ள  கடைகளில் மலிவான விலைக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இரண்டாவது குறுக்கு தெருவில் வாடிக்கையாளரை கவரும் பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .

3வது குறுக்குதெரு

 

இங்கே  நீங்கள் பழுது பார்க்கும் உபகரணங்கள் ,வீட்டு உபகரணங்கள் ,மற்றும் அழகுசாதன பொருட்களையும் காணலாம்.

 

                                       சீனா தெரு

 

சீனா தெருவில்  கண்ணாடிப் பொருட்களுடன் வைபவ அலங்கார பொருட்களை  நீங்கள் காணலாம்.

 

                                   4வது குறுக்குதெரு

காலை வேளைகளில் மிகவும் பரபரப்பாக காட்சியளிக்கும். உணவு பண்டங்களை மையமாக கொண்டு மொத்த வியாபாரங்கள் இங்கு அதிகளவில் நடைபெறுகிறது .

 

                                  1வது குறுக்குதெரு

அனைத்து விதமான கையடக்க தொலைபேசி நிறுவனகளின் கையடக்கத்தொலைபேசிகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம். நவீன தொழிநுட்ப கருவிகளின்  அணிகலன்களும் மலிவான விலையில் இங்கு கிடைக்கும்.

 

                                    மல்வத்த  தெரு

காலணிகள், தோல் பைகள், பயணப் பைகள் போன்றவை இங்கு பெற்று கொள்ளலாம்.

 

சிறந்த பொருட்களை மிகவும் மலிவான விலையில் பெற கொழும்பு பெட்டா சந்தை உங்களுக்கு உதவும்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here