அனைத்தையும் நாடி  வெப்ப நிலையை தணிக்க ஆரோக்கியமான பழங்கள்

வெப்ப நிலையை தணிக்க ஆரோக்கியமான பழங்கள்

இன்றைய நவீன உலகில் உணவு தட்டுப்பாடுகள் பெரும்பாலும் இல்லையென்றாலும் அதிக உணவு உட்கொள்ளுதல், ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளுதல் என்பன பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.ஆரோக்கியமற்ற உணவின் மீதான நமக்குள்ள விருப்பம் குறைந்தாலே நமது உணவு பழக்கம் மேம்படும். இதற்கு ஆரோக்கியமான உணவு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது
அவசியமாகும்.

மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப வேலை பளு, நேரம் இன்மை காரணமாக பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் உட்கொள்ளும் இளைஞர்கள் பழங்கள் உட்கொள்வதின் அவசியத்தை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

*ஆரோக்கியமான உணவில் பழங்கள் அதிகம் செல்வாக்கு செலுத்துகிறது.

அவகாடோ

மத்திய அமெரிக்கா வம்சாவளியை சேர்ந்த வெண்ணை பழம் எனப்படும் அவகோடா மற்றைய பழங்களை போலில்லாமல் அதிக நல்ல கொழுப்பை கொண்டுள்ளது.
அதிக கலோரிகளை கொண்டுள்ள அவகடோ ஆரோக்கியமான பழவகையாகவும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.

தாவரத்தின் நேரடி ஊட்டச்சத்துகளான மோனோ நிறைவுறா கொழுப்புகள், நார் சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்களை அதிகளவில் கொண்டுள்ள இப்பழத்தின் மூலம் சீரான இதய துடிப்பு, பக்கவாதம், உடல் சோம்பல், வலுவற்ற எலும்பு பிரச்சனை, மலசிக்கல் போன்ற நோய்களை தடுக்கலாம்.

பப்பாசி பழம்

மெக்ஸிகோ நாட்டிற்கு உரித்தான ருசியான கவர்ச்சியான பழமே பப்பாளி பழம் ஆகும். உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும் பப்பாளி பழம் பழ பிரியர்களின் விருப்பங்களில் ஒன்றாகும். குறைந்த கலோரிகளை கொண்ட பப்பாளி பழத்தில் கொலஸ்ரோல் கிடையாது. மென்மையாக எளிதில் ஜிரணிக்க கூடிய சதையை கொண்ட பப்பாளியில் விட்டமின்கள், பைட்ரோ நியூட்ரிங்ஸ் மற்றும் இயற்கை தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

நன்கு கரைய கூடிய நார் சத்துள்ள உணவு என்பதால் குடல் இயக்கங்களுக்கும் , மல சிக்கல் பிரச்சனைகளுக்கும் உதவுகின்றது. ஆரோக்கியமான பார்வைக்கும் ஆரோக்கியமான சருமத்திற்கும் உதவுவதுடன் பல வகை தோல் பிரச்சனைகளுக்கும் பப்பாளி பழம் உதவுகின்றது .

தர்பூசணி

கோடை கால வெப்பத்தை வெல்ல சிறந்த பழமான தர்பூசணி
கோடை கால வெப்ப நிலையை தணிக்க  தேவையான நீரையும் எலக்ர்ட்ரோலைட்களையும்  கொண்டுள்ளது .

நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் ஏ யை கொண்ட தர்பூசணி குறைந்த கலோரியையும் கொழுப்பையும் கொண்டுள்ளது.
அதுமட்டுமல்லாது இதய துடிப்பை சீர் செய்வதுடன் இரத்த அழுத்தம் ,பக்கவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு உதவி செய்கின்றது.

டேட்ஸ்

மென்மையான எளிதில் ஜிரணிக்க கூடிய சதைகளை கொண்ட டேட்ஸ் பழங்களின் பூர்விகம் எகிப்தாக நம்பப்படுகிறது. புத்துணர்ச்சியூட்டும் டேட்ஸ் பழங்கள் நார் சத்தை கொண்டதுடன் நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த கசிவு மற்றும் பார்வை குறைபாடுகளுக்கு தேவையான சத்தையும்  தருகின்றது.
உடல் சோம்பலை போக்கவும் வெப்ப நிலையை தணிக்கவும் உதவுகின்றது.

*கால நிலை மாற்றங்களால் ஏற்படும் உடல் வெப்பநிலையை தடுக்க பழங்கள் உதவி செய்கிறது.

ஆகையால் ஆரோக்கியமான பழங்களை உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here