அழகை நாடி குளிர் காலத்திற்கேற்ற சரும பராமரிப்பு!

குளிர் காலத்திற்கேற்ற சரும பராமரிப்பு!

2020 Mar 12

வெப்பமான காலநிலை காலங்களில் நம் மனதும் உடலும் குளிர்ச்சியையும் குளிரான பிரதேசத்தை தேடியே செல்கிறது. அவ்வாறு நாம் குளிர் பிரதேசத்துக்கு செல்லும் போது நமது சருமம் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். உதாரணமாக, குளிர் பிரதேசம் ஒரு வித சோம்பலை தருவதுடன் அதிகம் வியர்க்காது. எனவே, சருமம் மிக வறட்சியாக காணப்படும். அதே சமயம் உணவு ஒவ்வாமை, உடல்நிலை மாற்றம் எனச் சமாளிக்க வேண்டிய சவால்களுக்கும் குறைவில்லை. அப்படியான சமயங்களில் அவற்றை சமாளிப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளது.

  • சரும பராமரிப்புக்கான பயண பொதிகள்

 

பயணத்தின் போது உடை மற்றும் உணவு பொருள்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் சருமப் பராமரிப்புக்கும் கொடுக்க வேண்டும். உங்களது சருமம் எவ்வாறானது என பயணத்துக்கு முன்பே சரும நிருபரிடம் சென்று அறிந்து வைத்திருக்க வேண்டும்.அப்போது தான் உங்கள் சருமத்துக்கேற்ற பராமரிப்பு வழிமுறைகளை அறிவுறுத்துவார். இதனால் சரும பாதிப்பிலிருந்து தப்பலாம்.

அவரவர் சருமத்துக்கேற்ற ஃபேஸ் வாஷ், மாய்ஸ்ச்சரைஸர், சன்ஸ்க்ரீன், லிப்-பாம் போன்ற விஷயங்களுடன் சானிடைசர், வெட் டிஷ்யூ, ரெஃப்ரெஷிங் ஸ்ப்ரே போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும்.
சரும பராமரிப்புக்கான `டிராவல் கிட்’ இருப்பது மிக அவசியமாகும்.

 

  • வாகன பிரயாணத்தின் போதும் பராமரிப்பு தேவை

 

பொதுவாக வாகனப் பயணத்தின் போது ஒப்பனைகள் அதிகம் பாவனையில் இல்லாமல் இருப்பது நல்லது.
ஏனெனில் பயணத்தால் ஏற்படும் தூசு மாசு காரணமாக முகப்பரு, ராஷஸ் போன்ற சரும ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
வறண்ட சருமத்தை தேவைப்படும் நேரத்தில் கழுவிவிட்டு மாய்ஸ்ச்சரைஸர் தடவ வேண்டும்.
மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை உதடுகளை கழுவிவிட்டு, லிப் -பாம் தடவினால், உதடுகள் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.

  • பருவ நிலை பராமரிப்பு

குளிர் பிரதேசம் குறைந்த உஷ்ண நிலையை கொண்டுருப்பதால் உடல் வறட்சி ஏற்படும். இதற்கு மாய்ஸ்ச்சரைஸர் அவசியம். தேவையான நேரத்தில் பெப்டைட் சீரத்தை (Peptide serum) முகத்தில் தடவலாம்.
இது சருத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு, சருமத்தில் ஊடுருவிச் சென்று வறண்ட சருமத்தின் முக்கிய பிரச்சனையான சருமச் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
குளிர் பகுதி என்பதால் சிலர் குளிப்பதை தவிர்ப்பார்கள். அவ்வாறு இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் குளித்து சருமத்தைச் சுத்தமாக வைத்திருந்தால் சரும ஒவ்வாமையைத் தவிர்க்கலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here