கலை கலாசாரத்தை நாடி குமரிக்கண்டம் உண்மையா? ஓர் அலசல்!

குமரிக்கண்டம் உண்மையா? ஓர் அலசல்!

2020 Apr 1

மூழ்கினும் வரலாறு  – குமரிக்கண்டம் (லெமுரியா)
உலகின் முதல் மனிதன் பிறந்ததும் தமிழ் மொழி உதித்ததும் குமரிக்கண்டத்தில் தான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் நாட்டில் தொடங்கி கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே மடகஸ்கார் வரையுள்ள அந்தமான் ,இலங்கை, மாலைத்தீவு என அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய இந்திய அமைப்பிலிருந்த மாபெரும் தீபகற்பம நாடு தான் நம் தமிழ்நாடு.

முன்னொரு காலத்தில், பாகுபலி திரைப்படத்தில் வரும் மாபெரும் ராஜ்ஜியமாக இயங்கிக் கொண்டிருந்த இந்த குமரிக்கண்டம்  தற்போது ஆடி ஓய்ந்து கடலுக்கடியில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

குமரிக்கண்டம் பற்றிய ஆதாரம் அறிவியல் ரீதியாக இல்லாமல் சங்க இலக்கியங்களில் மட்டும் இருப்பதால் சிலர் நம்ப மறுக்கின்றனர்.

தொல்பொருளியல் ரீதியாக குமரிக்கண்டம் இல்லை என ஆதாரமும் இல்லை என்பதால், குமரிக்கண்டம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என நம்பப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள Wits பல்கலைக்கழகத்தில் லீவிஸ் ஏஷ்வால் எனும் பேராசிரியரின் தலைமையில் ஒரு குழு மொரிசியல் தீவிலுள்ள கடற்கரை பகுதிகளில் நடத்திய ஆராய்ச்சிகளில் மூன்று கோடி ஆண்டுகள் பழமையான சிற்கான் எனப்படும் பல வண்ணங்களில்  ஔிரும் பாறைகளைக் கண்டுப்பிடித்தனர். மேலும் மற்ற தீகளிலுள்ள பாறைகளனைத்தும் 90 லட்சம் ஆண்டுகள் மட்டுமே பழமையாக இருக்க இப்பாறைகள் மட்டும் எப்படி 36 கோடி ஆண்டுகள் பழமையாக இருக்க முடியும் என ஆழ செய்த ஆராய்ச்சியில் இப்பாறை படிவுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங்கடலில் மாபெரும் கண்டமாக இருந்திருக்கலாம். சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மாபெரும்  கடல் சீற்றம்  மற்றும் கண்டத்திட்டு நகர்வினால்  இந்தக்கண்டம் முழுவதுமாக அழிந்துள்ளது எனவும் , மேலும் இப்பாறை படிவுகள் கடல் பேரலையினால் மொரிசியல்  வரை கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் மிக உறுதியாக கூறுகிறார்.

ஆஸ்திரேலிய மற்றும் ஆப்பிரிக்க மலைவாழ் பழங்குடியினர் பேசும் மொழி தமிழ் போல் இருப்பதும் சுமேரியன், இந்து வெளி நாகரிகத்தை உலகின்  தொன்மையான நாகரிகம்  என தற்போதைய அறிவியலாளர்கள் கருதும் நிலையில் தமிழ்நாட்டிலுள்ள கடலோர பகுதிகளை ஆராய்ச்சி செய்த கிரஹம் ஹன்கொக் என்பவர்  பூம்புகாரின் நாகரிகம் 1,10,000ஆண்டுகள் பழமையானது எனவும் அந்த நாகரிகம் கடல் கோள்களால் அழிந்தது எனவும் கூறுகின்றனர்.

இப்பேற்பட்ட நாகரிகத்தை இன்றும் ஆராய்ச்சி செய்யாமல் இருப்பது தமக்கு ஆச்சரியமாக இருப்பதையும் தெரிவித்தார்.

20,000 ஆண்டுகள்  பழமை வாய்ந்த தமிழனின் வரலாற்றை கண்டறிவதில் உலக நாடுகளின் அரசியலும் பொதிந்துள்ளது என்பது மறுக்கமுடியாது போலும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here